டெல்லி CAA போராட்ட கலவரத்தில் 32 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

0

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இரு பிரிவினர் மோதல்..!

டெல்லியில் CAA க்கு ஆதரவாக போராடியவர்களுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இதில் கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது இந்த கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது. இதில் போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவரும் அடக்கம். தற்போது அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறிது சிறிதாக அமைதி நிலை திரும்பி வருகிறது.

நிதியுதவி..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும், வீடுகளை இழந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் மற்றும் காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here