போடு.. செம.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
போடு.. செம.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போடு.. செம.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 - முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு உதவித்தொகை:

புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டுக்கான (2022 -23) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பல்வேறு துறைகளின் கீழ் ரூ.10,696.61 கோடிக்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து பல முக்கிய அறிவுப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்கும், அரசின் எவ்விதமான உதவித் தொகையும் பெறாத மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here