ராயல் என்பீல்ட் ரசிகர்களுக்கு ஒரு கவலையான செய்தி!!

0
Royal Enfield

உலகின் பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்பீல்ட் இந்த புத்தாண்டில் ஒரு கவலை அளிக்கக்கூடிய தகவலை அதன் பிரியர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதாவது அதன் புல்லட் 500, தண்டர்பேர்டு 500 மற்றும் தண்டர்பேர்டு 500 எக்ஸ் ஆகிய மாடல்களின் விற்பனையை நிறுத்தி உள்ளது. மேலும் கிளாசிக் 500 மாடல்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் டீலர்கள் தெரிவித்துள்ளனர். மேற்குறிப்பிடப்பட்ட மாடல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.

நிறுத்தப்பட்டதற்கான காரணம்??

ராயல் என்பீல்ட் இன் இந்த முடிவுக்கு இன்றைய காலகட்டத்தில் 500சிசி பைக்குகள் மேல் இருந்த மோகம் குறைந்துள்ளதே காரணமாகும். இதனால் 500சிசி பைக்குகளின் விற்பனையும் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் இன் இன்டெர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 போன்ற மாடல்களின் மீது மக்களை திருப்பும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை மாடல்கள் நிறுத்தப்பட்ட மடல்களை விட 40 ஆயிரம் ரூபாய் விலை அதிகமாகும்.

பிஸ் 6 மாடல்களின் வருகை

விரைவில் ராயல் என்பீல்ட் தனது 350சிசி ரக பைக்குகளின் பிஎஸ் 6 ரக மாடல்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. புதிய ஹிமாலயன் 2020 மாடலும் சீக்கிரம் அறிமுகமாக உள்ளது. மேலும் ராயல் என்பீல்ட் மெல்லிய தேகம் உடையவர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையிலான பைக்குகளை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here