அப்பப்பா…என்ன ஒரு குலுக்கு…என்ன ஒரு மினுக்கு…!ஹிந்தி பாடலுக்கு ஆட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை!!!

0

சன் டிவி ஹிட் சீரியல் வரிசையில் ஒன்றாக இருக்கும் நாடக தொடர் ரோஜா சீரியல். இந்த சீரியலில் கதையின் நாயகி ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கார். இவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தெலுங்கு திரை துறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா நல்கார். அதுவும் இவர் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தான்  தன்னுடைய திரைப் பயணத்தை ஆரம்பித்தார். அதாவது அந்தாரி பந்துவையா என்ற தெலுங்கு படமே அவருக்கு வெள்ளித்திரையில் முதல் படமாகும். மேலும் இந்த படம் நல்ல வெற்றி பெற்றதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் சின்னத்திரையும் விட்டுவைக்காத இவர் , ஈ டிவியில் மேகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். மேலும் இவர் ஜெமினி டிவியில் ஒரு சீரியல்  நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் அந்த கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியல் ஏறக்குறைய 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அர்ஜுன் மற்றும் ரோஜா ரொமான்ஸ்க்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாகியும், இவருக்கு ஒரு அடையாளத்தை தந்தது தமிழ் மொழியின் ரோஜா சீரியல் தான். சிறு வயது முதல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என நடித்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் களம் கண்டு வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு இந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here