சிறிதும் அசைவின்றி இருக்கும் மூர்த்தியின் அம்மா லட்சுமி…!பதறிப்போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!!

0

விஜய் டிவி  டாப் சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்று, மூர்த்தியின் அம்மா லட்சுமியை எழுப்ப வரும் முல்லை அவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை பார்த்து கத்துகிறார்.அவரின் சத்தம் கேட்டு அனைவரும் வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை பற்றி பேசியதால் கோபமான மூர்த்தி தனத்தை கண்ணன் வீட்டிற்கே செல்லுமாறு கூறி திட்டுகிறார். இதனை கேட்கும் கதிர் தன் அண்ணன் மூர்த்தியை திட்டுகிறார். இந்நிலையில் இன்று, தனக்காக கதிர் பேசுவதை பார்த்து மிகுந்த சந்தோஷமடைகிறான் தனம். இதையடுத்து கதிர் முல்லையிடம் தனத்தை உள்ளே கூப்பிட்டு செல்லுமாறு சொல்கிறார்.

அதன் பின்னர் கதிர் மூர்த்தியிடம் சும்மா அண்ணியை திட்ட வேண்டாம். அண்ணி பாவம் என கூறுகிறார். அதன் பிறகு ரூமுக்கு வருகிறார் கதிர். அதன் பிறகு ரூமுக்கு வரும் முல்லை கதிரிடம் மூர்த்தி மாமாவை ஏன் அப்படி திட்டுனீங்கன்னு கேட்கிறார். அதன் பின்னர் கண்ணன் போனதுக்கு அப்புறம் அண்ணி ரொம்ப பாவம் அவங்கள ஏன் அண்ணன் திட்டனும் என கேட்கிறார்.

அப்பொழுது முல்லை அப்படி என்ன அக்கா மாமா கிட்ட பேசுங்க என கேட்க, தனம் கண்ணனைப் பார்த்ததையும், அவருக்காக மளிகை பொருட்களை அனுப்ப சொன்னதையும் முல்லையிடம் கூறுகிறார் கதிர். இதெல்லாம் நடந்து உள்ளதா? என  கேட்கிறார் முல்லை.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் பழைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்  முல்லை கதிர் கன்னத்தில் எதிர்பாராத விதமாக  முத்தம் கொடுக்கிறார் முல்லை. அதன் பிறகு அவர்களுக்குள் ரொமான்ஸ் நடக்கிறது.

இந்நிலையில் காலை சமையல் அறைக்குள் வரும் மீனா தனத்திடம் உண்டியல் பற்றி கேட்கிறார். அதற்கு தனம் அந்த உண்டியல் விவரங்கள் பற்றி கூறுகிறார். இதையடுத்து சதீஷ், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கு வருகிறார்.

அப்பொழுது சதீஷ், இரண்டு பெரும் காலேஜ் வரீங்களா?இல்லையா? என கேட்க அதற்கு  கண்ணன் ஐஸ்வர்யாவிடம் நீ படி நான் வேலைக்கு போறேன் என்று கூறுகிறார். இவ்வாறு இருவரும் யார் வேலைக்கு போவது…யார் காலேஜ்க்கு போவது… என பேசி கொண்டு இருக்கின்றனர். அதன் பின்னர் வெளியே வரும் சதிஷ் கண்ணனிடம் ஜீவா அண்ணன் உன்னை பற்றி எப்போதும் விசாரிச்சுட்டே தான் இருப்பாங்க, மேலும் நான் கொடுத்த 4000 ரூபாய் உன்னுடைய ஜீவா அண்ணன் கொடுத்தது தான் என கூற  அதை கேட்ட கண்ணன் வருத்தப்படுகிறார்.

இதையடுத்து  வழக்கம் போல  லட்சுமியை எழுப்ப முல்லை செல்கிறார். அப்பொழுது சிறிதும் அசைவின்றி இருக்கிறார் லட்சுமி. அதை பார்த்து பதறிப்போன முல்லை கூச்சலிடுகிறார். அதன் பின்னர் மூர்த்தி,ஜீவா மற்றும் கதிர் வந்து அம்மாவை எழுப்ப முயற்சிக்கின்றனர். அப்பொழுதும் அசைவின்றி லக்ஷ்மி இருப்பதால் அனைவரும் பதற்றத்துடன் உள்ளனர். இவ்வாறு இன்றைய கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here