சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்…, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??

0
சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??
சொந்த மண்ணில் மிரட்டும் ஹிட் மேன்..., ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொலிப்பாரா??

தனது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் சிறந்த சாதனையை படைத்துள்ள ரோஹித் சர்மா மீது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து வருகின்றன.

ரோஹித் சர்மா:

இந்திய அணி இந்த வருடத் தொடக்க முதல், தனது சொந்த மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி உள்ள 12 போட்டிகளில் 10 ல் வெற்றி பெற்று, அனைத்து தொடரையும் வென்று அசத்தி உள்ளது. இதே உத்வேகத்துடன் இந்திய அணி, எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா, தனது சொந்த மண்ணில், டெஸ்டில் படைத்த சாதனை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹிட் மேன் ரோஹித், அதிகபட்சமாக இரட்டை சதம் (212) அடித்ததுடன் 1760 ரன்களை குவித்துள்ளார்.

எப்ட்றா .., LIO படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை திரிஷா.., டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய புகைப்படம்!!

இவர், 6 அரைசதம் மற்றும் 7 சதம் உட்பட 73.33 என்ற சிறந்த சராசரியையும், 66.69 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார். சமீபத்தில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இவர், தனது பார்மை மீட்டெடுத்துள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர், தொடக்க வீரராக சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியின் ஸ்கோர் உயர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here