கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் பிரபல CSK வீரர்.., திடீரென வெளிவந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் பிரபல CSK வீரர்.., திடீரென வெளிவந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் பிரபல CSK வீரர்.., திடீரென வெளிவந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

ராபின் உத்தப்பா ஓய்வு!!

கர்நாடகாவை சேர்ந்த உத்தப்பா இந்திய அணியில் 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். இவர் 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

அதில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காகவே இந்த ஓய்வு முடிவை அறிவித்தேன் என்றும், இதுவரை எனக்கு துணையாக இருந்த BCCI மற்றும் சக வீரர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது முன்னாள் ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தற்போதைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நன்றி கூறினார்.

இவர் கடந்த சீசனின் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 230 ரன்கள் எடுத்தார். மேலும் கடந்த 2007 டி20 உலகக்கோப்பை தொடரிலும், ஐபிஎல் தொடரில் 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காகவும், 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் கோப்பையை வெல்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here