ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – தேசிய பென்ஷன் அமைப்பில் (NPS) கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்!!

0
தேசிய பென்ஷன் அமைப்பில் (NPS) கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்!!
தேசிய பென்ஷன் அமைப்பில் (NPS) கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்!!

தேசிய ஓய்வூதிய அமைப்பின் மூலம், பென்ஷன் பெறுவோர், தங்கள் NPS வருவாயிலிருந்து வருடாந்திர தொகையைப் பெற, முக்கிய வழிமுறைகளை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதிரடி மாற்றம்:

நாடு முழுவதும் உள்ள, பெரும்பாலான ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மூலம், பென்ஷன் பெற்று வருகின்றனர். தங்கள் பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, காப்பீட்டு துறையில் இருந்து மூத்த குடிமக்களின் நலனுக்காக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருவாயிலிருந்து, வருடாந்திர தொகையை பெறுவதற்கு, முன்மொழிவு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இதுவரை பென்ஷன்தாரர்களுக்கு இருந்து வந்தது. ஆனால் தற்போது, இந்த தொகையை பெற இனி தனி படிவத்தை நிரப்ப வேண்டியது இல்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றறிக்கையை கடந்த 13ஆம் தேதி வெளியிட்ட இந்த அமைப்பு, உடனடியாக இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதனால், பென்ஷன் பெறும் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here