தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம் – யோசிக்கவே வேண்டாம்., கல்வித்துறை அதிரடி!!

0
தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம் - யோசிக்கவே வேண்டாம்., கல்வித்துறை அதிரடி!!
தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம் - யோசிக்கவே வேண்டாம்., கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை உடனடியாக அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை உத்தரவு :

தமிழகத்தில், கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டு இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு, முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் கூட சிற்பி என்ற பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அரசு தொடங்கியது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால், அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் 30-க்கும் குறைவாகவும், ஊரகப் பள்ளிகளில் 15 க்கும் குறைவாகவும் மாணவர்களின் எண்ணிக்கை இருந்தால் அவர்களை, அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here