இந்திய ஆடவர் அணியானது 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பண்ட் டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்து உள்ளார். அந்த முகாமில் கங்குலி, பாண்டிங் போன்ற வீரர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து சௌரவ் கங்குலி ஓர் முக்கிய கருத்தை கூறி உள்ளார். அதில், பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார் என்றும் அடுத்த சீசனில் இருந்து விளையாடுவார் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்வரும் ஏலத்தை கருத்தில் கொண்டு, பண்ட் அணியின் கேப்டன் என்பதால் அவருடன் அணி பற்றி விவாதித்தோம் என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.