இவர்கள் தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.., அப்போ இந்தியா? ரிக்கி பாண்டிங் சொல்லும் முக்கிய காரணம்!

0
இவர்கள் தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.., அப்போ இந்தியா? ரிக்கி பாண்டிங் சொல்லும் முக்கிய காரணம்!
இவர்கள் தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.., அப்போ இந்தியா? ரிக்கி பாண்டிங் சொல்லும் முக்கிய காரணம்!

சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தற்போது T20 தொடர் தான் அதிக ரசிகர்களிடையே பரவியுள்ள நிலையில், அந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் முக்கிய 5 வீரர்களை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் டாப் 5 டி20!

தற்பொழுது டி20 கிரிக்கெட் தொடர்கள் உலகில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தங்களுக்கென ஒரு டி 20 தொடர்களை வைத்து விளையாடி வருகின்றனர்.அதன்படி முதன் முதலில் இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் பிக்பாஷ் லீக் என ஆரம்பிக்கப்பட்டது. இதே போன்று சர்வதேச தொடர்களிலும் T20 போட்டிகள் விளையாட பட்டு வரும் நிலையில் உலகின் சிறந்த ஐந்து டி20 வீரர்களின் பட்டியல் குறித்து முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்த சில விஷயங்களை பார்க்கலாம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாபர் அசாம் :

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன இவர் சர்வதேச T20 தொடர்களில் விளையாடி அதிக ரன் குவித்த வர்களுக்கான ICC தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

ரஷித் கான் :

ஆப்கானிஸ்தான் வீரரான இவர் பல T20 போட்டிகளில் விளையாடி அதிக சாதனைகள் குவித்துள்ளார். மேலும் IPL தொடர்களில் ரஷித் கானை ஏலத்தில் வாங்க பல அணிகள் போட்டி போட்டு கொள்கின்றனர் என ரிக்கி பாண்டிங் புகழ்ந்து கூறியுள்ளார்.

ஜோஸ் பட்லர் :

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் T20 கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இவருக்கு பயிற்சி அளிக்கும் போது பல வீரர்களின் திறமை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா :

தற்போதைய இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வரும் வீரர் தான் இவர். IPL தொடரில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஆக இருந்து பட்டத்தை வென்றுள்ளார். மேலும் அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரில் கூட இந்திய அணிக்கு கேப்டன் ஆக இருந்து வெற்றி அடைய வைத்துள்ளார். இந்த இளம் வயதிலே இவர் பல சாதனைகள் புரிந்து வருவதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

பும்ரா :

இந்திய அணியின் பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் பல போட்டிகளில் அருமையாக தனது பந்து வீச்சின் மூலம் சாதனைகள் புரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here