தமிழ்வழி மாணவர்களுக்கு TNPSC தேர்வில் 20% இடஒதுக்கீடு – ஆளுநர் ஒப்புதல்!!

0

தமிழக அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கான 20% இடஒதுக்கீடு வழங்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் அரசாணை பிறப்பித்து கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார்.

20% இடஒதுக்கீடு

தமிழக அரசில் உள்ள பல்வேறு பணி இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்துகின்றன. இதில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வில் வெற்றி பெரும் நபர்களுக்கு அந்தந்த துறையில் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பல்வேறு குளறுபடிகளும், ஊழல்களும் நடத்தப்பதால் தமிழ்வழி பயின்ற மாணவ்ர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க கோரி மசோதா சட்டப்பேரவையில் மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

tnpsc 2020 group 1
tnpsc exams

தமிழ்நாட்டில் பள்ளி முதல் கல்லூரிபருவம் வரையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்தநிலையில், சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 8 மாதம் ஆகியும் ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து!!

இந்த வழக்கு விசாரனையின் போது, தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகையை அமல்படுத்துவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா, ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் 8 மாதங்களாக கிடப்பில் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பர்? என உய்ரநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

8 மாதகாலமாக நிலுவையில் இருந்த இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கையெழுத்திட்டு அமல்படுத்தினார். தமிழ்வழியில் 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்கமுடியும் என்பது குறிப்பிடப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here