10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது?? தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

0

தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அம்மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பொது தேர்வு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் கருதி கடந்த 19ம் தேதியன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சேலத்தில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை – குடும்பத்தினர் மகிழ்ச்சி!!

தற்போது 9 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு அரசாணை ஒன்றினை அனுப்பியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கவும், தேர்வு கட்டணத்தை வசூலிக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பெற மாணவர்களை பள்ளிகளுக்கு நேரில் வரவழைக்கலாம் எனவும், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு தனியாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here