ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் – அமீத்ஷா அறிவிப்பு!!

0
Jammu and Kashmir

இன்று மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமீத்ஷா ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில அந்தஸ்து:

கடந்த ஆகஸ்ட் 5, 2019ல் ஜாமம் காஷ்மீர் மாநிலம், ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமீத்ஷா இன்று மக்களவையில் ஆற்றிய உரையில் “ஜம்மு-காஷ்மீரின் 370 வது பிரிவு ரத்து செய்யபட்டு 17 மாதங்களே ஆகும் நிலையில் அங்கு நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் குறித்த தகவல்களையும் கணக்குகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் கடந்த 70 வருடகால ஆட்சியில் காஷ்மீரின் நலத்திட்டங்கள் குறித்து தாங்கள் செய்தவற்றிற்கு சரியான தகவல்களை வைத்துள்ளாரா? என்று காங்கிரஸ் ஆட்சி குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

முழு அளவு ரயில் போக்குவரத்து சேவை – ரயில்வே துறை புதிய அறிவிப்பு!!

தொடர்ந்து அவர், “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2021ன்படி, அவற்றிற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தீர்கள் ? பொருத்தமான நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவின்படி அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இன்று வரை பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புக்குரல் பெருகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here