123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – 73 வகையான சீர்வரிசை வழங்கி அசத்திய அதிமுக!!

0
admk
admk

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக வருடம் தோறும் 123 ஏழை பெண்களுக்கு அனைத்து சீர்வரிசைகளும் அளித்து இலவசமாக திருமணம் செய்து வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவையில் நடைபெற்ற இலவச திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இலவச திருமணம்:

கோவை மாவட்டம் அதிமுக சார்பில் ஆண்டு தோறும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை [பிப்ரவரி 24] முன்னிட்டு 123 ஏழை பெண்களுக்கு அனைத்து விதமான சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்த்திவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வுக்கென கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இன்று காலை கோவை மாவட்டம் பச்சாபாளையதத்தில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

பாஸ்டேக் விதிமுறை – இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்!!

இந்த திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் புதுமண தம்பதிகளின் உறவினர்கள், அதிமுக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர். புதுமண தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ, கியாஸ் ஸ்டவ், குக்கர் உள்ளிட்ட 73 வகையான பொருட்கள் சீர்வரிசையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here