பாஸ்டேக் விதிமுறை – இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்!!

0

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்டேக் விதிமுறையை மத்திய அரசு பின்பற்ற கால அவகாசத்தை கொடுத்தது. தற்போது பாஸ்டேக் இன்று நள்ளிரவுடன் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாஸ்டேக்:

கடந்த 2016ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு இந்த பாஸ்டேக் வழிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை ஏற்படாது. மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்சனைகள் எதுவும் நிலவாது என்று கூறினர். மேலும் இந்த திட்டத்தை கட்டாயப்படுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு பல ஆண்டாக கால அவகாசத்தை கொடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்த மாதம் 15ம் தேதி அதாவது இன்றுடன் வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி கடப்பதற்கான கால அவகாசம் முடிவடையும் என்று கூறியது. அதன் பின்பும் பாஸ்டேக்கை பெறாவிட்டால் சுங்கச்சாவடிகளில் இரண்டு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டடிய நிலை ஏற்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. இந்நிலையில் பாஸ்டேக் விதிமுறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சித்தி 2 சீரியலில் இருந்து விலகும் ராதிகா – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

மேலும் பாஸ்டேக் கணக்கிற்கான QR code ஐ வாகனத்தில் ஓட்டினால் மட்டும் போதும், சுங்கச்சாவடிகளில் அதுவாகவே ஸ்கேன் செய்து அவர்களின் வங்கி கணக்கில் இருந்து கட்டணத்தை பெற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தனர். மேலும் இதற்காக வாகன ஓட்டிகள் பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் வைத்திருப்பது அவசியமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here