குழந்தைகளை குறிவைக்கும் கொரோனாவின் மூன்றாவது அலை – இதுதான் காரணமா??

0

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா மூன்றாம் அலை:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று முதல் அலை இரண்டாம் அலை என மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அச்சமடையும் வகையில் சுகாதாரத்துறை அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலைக்கு தயாராக வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் மூன்றாம் அலை எப்போது தொடங்கும் என்று தெரியாததால் தற்போது முதல் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பல மாற்றங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தான் நாட்டில் மூன்றாம் அலை உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதுவரை நாட்டில் உருமாறிய கொரோனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது B.1.617 வகையான வைரஸ் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வகையான வைரஸ் ஆந்திராவில் சில இடங்களில் காணப்பட்டு வருகிறது. பொதுவாக கொரோனாவின் முதல் அலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 10 நாட்களில் தான் நுரையீரல் தாக்கப்படும். மேலும் அதன் இரண்டாம் அலையில் தற்போது 5-7 நாட்களில் தாக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலையில் நுரையீரல் 2-3 நாட்களில் தாக்கப்படுமாம். தற்போது ஆந்திராவில் பரவும் உருமாறிய கொரோனா 2-3 நாட்களில் நுரையீரலை தாக்கி வருகிறது.

மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!

கொரோனாவின் மூன்றாவது அலை 18 வயதிற்கு உட்பட்ட அனைவரையும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் இந்தியாவில் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 70 சதவிகிதம் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டால் மூன்றாவது அலையில் இருந்து அவர்கள் தப்பித்து விடுவர். ஆனால் தற்போது வரை உலக நாடுகளில் எங்கும் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இதன் காரணமாக கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளிடம் அதிகமாக பரவும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here