பெங்களூருவை கலங்கடித்த ‘பூம்’ சத்தம் – ஏலியன்கள் வருகையா..? பீதியைக் கிளப்பும் இணையவாசிகள்..!

0
Bengalore
Bengalore

பெங்களூருவின் பல பகுதிகளில் இன்று (மே 20) மதியம் 1.20 மணிக்கு தீடிரென ஏற்பட்ட 2 மர்ம சத்தத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்கான காரணம் குறித்து வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பெங்களூரு ‘பூம்’

பெங்களுருவில் உள்ள குக்கி டவுன், விவேக் நகர், ராமமூர்த்தி நகர், ஒசூர் சாலை, எச்ஏஎல், பழைய மெட்ராஸ் சாலை, உல்சூர், குந்தனஹள்ளி, கமனஹள்ளி, சிவி ராமன் நகர், ஓயிட்பீல்ட் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் போன்ற பகுதிகளில் இந்த மர்ம சத்தம் கேட்டு உள்ளது. இதனால் பூகம்பம் ஏற்பட்டு விட்டதாக அதிர்ச்சி அடைந்த மக்கள் அவரவர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சிலர் பூம் என்கிற சத்தம் கேட்டதாகவும், பெரிய இடி போன்ற சத்தம் கேட்டதாகவும் கூறுகின்றனர்.

வளிமண்டலத்தில் விமானங்கள் அதிவேகத்தில் செல்லும் பொழுது இது போன்ற சத்தம் ஏற்படலாம் என கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மைய தலைவர் கூறியுள்ள நிலையில் #Bangalore #Aliens போன்ற ஹாஷ்டேக்களுடன் இணைய வாசிகள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சத்தம் தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நொடிகள் ஜன்னல்கள் மற்றும் கதவு வாசல்கள் ஆடியதாகவும் வேறு எந்த சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விமானங்கள் எதுவும் சென்றதா என்பதை உறுதி செய்யுமாறு விமானக் கட்டுப்பாடு அறையிடம் போலீசார் கோரி உள்ளனர். இணையவாசிகளோ ஏலியன்கள் வருகை, பூகம்பம் என ஆள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here