விஜய் மீது பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி ஓபன் டாக்..!

0

நடிகர் விஜய் மீது அஜித் இந்த காரணத்திற்காக பொறாமைப்பட்டார் என பிரபல பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தல & தளபதி:

நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தங்களுக்கென தனி பாணியில் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருகின்றனர். இருவரும் நல்ல நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அவர்களது ரசிகர்கள் மாறி மாறி சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. அஜித், விஜய் ஆகிய இருவரும் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் ஒன்றாக நடித்து இருப்பர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் பிரபல சினிமா பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படம் மற்றும் படங்களில் இடம் பெரும் பாடல்கள் என இரண்டுமே மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம். இதற்காக அஜித், விஜய் மீது பொறாமைப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here