நோட் பண்ணிக்கோங்க மக்களே.! ஏப்ரலில் வங்கிகளுக்கு இத்தனை நாலு லீவாம்.!

0

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள்வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க RBI உத்தரவிட்டுள்ளது. வங்கி செயல்பாடே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து இருக்கிறது என்று சொல்லலாம்.

வங்கிகள் EMI:

உண்மையாகவே வங்கிகளுக்கு இது போதாத காலம் போலத் தான் தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் அரசு வங்கிகள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் சந்தேஸரா போன்றவர்கள் வாங்கிய கடனை திருப்பி வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் (NBFC – Non Banking Finance Companies) வேறு திவாலாகி, இந்திய வங்கிகளுக்கு மேலும் நெருக்கடி கொடுத்தது.

எந்தெந்த வங்கிகள் 3 மாத EMI தொகையை தள்ளிவைத்து இருக்கின்றன..? முழு விபரங்கள் இதோ..!

Bank strike for 2 days from today. Management refuses 5-day work ...

கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவாமல் இருக்க 21 நாட்களுக்கு ஷட் டவுன் அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. இதனால் ஏற்கனவே வங்கிக் கிளைகள் குறைவான நேரத்துக்கு மட்டுமே திறந்து வைக்கிறார்கள். அதோடு குறைந்த அளவிலான ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திலும் இருக்கிறார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆர் பி ஐ உத்தரவு

இதனால் கடன் கொடுத்த வங்கிகள், ஒழுங்காக தங்கள் கடன் தவணைகளை திருப்பி வசூலிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில், ஆர் பி ஐ வேறு இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்து இருக்கிறது. பல அரசு வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 3 தவணைகளை ஒத்திப் போட அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இதனால் வங்கி செயல்பாடே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து இருக்கிறது என்று சொல்லலாம்.

RBI | Bank merger: India is said to ask RBI to identify banks that ...

மேலும் ஏப்ரலில் விடுமுறைகள் வேறு அதிகம் உள்ளது. ஏப்ரலில் மட்டும் 14 நாட்கள் விடுமுறைகள். விடுமுறை நாட்களை ஆர் பி ஐ தனது வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது.

முதல் வார விடுமுறை

India's largest bank leaves the data of millions of users exposed ...

1 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள், 2 ஏப்ரல் 2020 ராம நவமி, 5 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை, 6 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி, 10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி, 11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை, 12 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை, 13 ஏப்ரல் 2020 பிஜு திருவிழா, போஹக் பிஹீ, செய்ரோபா (Cheiraoba), பைசாகி (Baisakhi) 14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், வங்காளி புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, விசு, போஹக் பிஹூ

மூன்றாவது & நான்காவது வாரம்

अब इस बड़े बैंक पर बढ़ रहा खतरा, क्‍या ...

15 ஏப்ரல் 2020 ஹிமாச்சல் நாள், போஹக் பிஹூ, 19 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை, 20 ஏப்ரல் 2020 கரிய பூஜா, 25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை, பரசுராமர் ஜெயந்தி, 26 ஏப்ரல் 2020 ஞாயிற்றுக் கிழமை, என ஆர்பிஐ வலைதளத்தில் பட்டியல் நீள்கிறது.

தமிழகம்

How Banks Work | HowStuffWorks

இதில் எந்த தேதிகள் எல்லாம் தமிழகத்துக்கு விடுமுறையாக இருக்கும் என்பதையும் கொடுத்து இருக்கிறோம். 01 ஏப்ரல் 2020 ஆண்டு வங்கி நிறைவு நாள் 06 ஏப்ரல் 2020 மகாவீர் ஜெயந்தி 10 ஏப்ரல் 2020 புனித வெள்ளி 11 ஏப்ரல் 2020 இரண்டாம் சனிக் கிழமை 14 ஏப்ரல் 2020 அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ் புத்தாண்டு 25 ஏப்ரல் 2020 நான்காம் சனிக் கிழமை ஆகிய தேதிகள் தமிழகத்தில் வங்கிகள் விடுமுறை எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ வலைதளம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here