மக்களே அலர்ட்.., இதுல மட்டும் கடன் வாங்கவே வாங்காதீங்க.., RBI விடுத்த எச்சரிக்கை!!!!

0
RBI விடுத்த எச்சரிக்கை
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கையில் ஒரு போன் இருந்தால் போதும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டுக்கு வந்து சேர்கிறது. இது தவிர முதலில் பேங்கில் கடன் வாங்குவதற்கு அவ்வளவு கஷ்டமான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது மொபைலில் ஒரு சில நொடிகளில் கடனை பெற்று விடலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் கடன் வாங்குவது சிலருக்கு மிகப்பெரிய சிக்கலையே ஏற்படுத்துவதாக RBI எச்சரித்துள்ளது.
அதாவது தற்போது போலியான மொபைல் ஆப்கள் மூலம் அதிக கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட தேதிக்குள் கடனை கட்டவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சட்டவிரோதமாக ஆன்லைன் கடன் வழங்கும் தளம் மற்றும் மொபைல் செயலிகளை தடை செய்ய மத்திய அரசுடன் இணைந்து RBI அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் போலியான நிறுவனங்களை நம்பி கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அது உங்களது உயிரையே பறித்து விடக் கூடும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here