போதை பொருள் வழக்கில் 6 மணி நேர தீவிர விசாரணையில் ரகுல் பிரித் சிங்.. சிக்குமா ஆதாரம்?

0

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரித் சிங்கிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். ஹவாலா மோசடி, போதைப்பொருள் கும்பல் மூலம் கறுப்புப்பணம் மாற்றப்பட்டதா என கேள்வி கேக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது திரை உலகில் பரப்பாக பேசப்படும் விஷயம் என்றால் அது போதை பொருள் வழக்கு தான். இந்த போதை பொருள் வழக்க்கில் பல முன்னணி நடிகர், நடிகைகள் பெயர் அடிபட்டது. அதுவும் குறிப்பாக கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் இறந்ததை அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் காதலி ரியா சக்ரவர்த்தியின் தோழியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் போதை பொருள் வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து ரகுல் ப்ரீத் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசரணையில் சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பெற்றுள்ளனர். மேலும் அந்த விசாரணை முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளனர். போதைமருந்து உபயோகிக்கும் பழக்கம் இருக்கிறதா?  போதைப்பொருள் கும்பல் மூலம் கறுப்புப்பணம் மாற்றப்பட்டதா? போன்ற கேள்விகள் ரகுல் பிரித் சிங்கிடம் கேக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here