திருமணத்திற்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

0

ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வைஷாலிக்கு விரைவில் அவரது காதலருடன் திருமணம் நடக்க உள்ளது. இதனால் அவர் தன் திருமணத்திற்கான ஷாப்பிங் வேலைகளை ஆரம்பித்து உள்ளார்.

சீரியல் நடிகைக்கு கல்யாணம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் ராஜா ராணி உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த சீரியலில் நடித்தவர் நடிகை வைஷாலி. இது மட்டுமல்லாமல், கதகளி, காதல் கசக்குதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், இது எதுவுமே இவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து, தற்போது இவருக்கும் இவரது காதலரான சத்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், திருமணத்திற்காக இருவரும் தயாராகி வருகின்றனர். இதற்காக, இருவரும் சேர்ந்து ஷாப்பிங் வேலைகளை துவக்கி விட்டனர். ஷாப்பிங்கின் பொழுது எடுத்த செல்பியை வைஷாலி பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here