போலீஸாக களம் இறங்கிய ராஜா ராணி 2 சந்தியா… ஒரு வேள சிவகாமி ஒத்துக்கிட்டாங்களோ!!!

0

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வரும் சந்தியாவின் ஆசை , தான் எப்படியாவது ஒரு IPS ஆக வேண்டும் என்பது தான். இந்நிலையில் அவர் போலீஸ் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போதைய கதையாக சீரியல் நாயகன் சரவணன் அவர்களின் தங்கை பார்வதி, விக்கி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர் கெட்டவர் என்பதை சமீபத்தில் அறிந்த பார்வதி தன் அண்ணன் சரவணன் மற்றும் அண்ணி சந்தியா உதவியால் அவரை விட்டு பிரிக்கிறார்.

இருப்பினும் விக்கி பார்வதியை விடாமல் தன்னிடம் இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் மூலம் அவரை மிரட்டி அடி பணிய வைக்கிறார். விக்கியின் சூழ்ச்சியை சந்தியாவிடம் கூறி உதவி கேட்கிறார் பார்வதி.அப்போது சந்தியா துணிச்சலாக செயல்பட்டு அவரிடம் இருக்கும் பார்வதியின் புகைப்படங்களை அழிக்கிறார். இவ்வாறு மிக விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

இந்நிலையில் இந்த கதையை பொறுத்தமட்டில் சந்தியா தான் ஒரு IPS அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் மிக பெரிய கனவு. இருப்பினும் விதிவசத்தால் படிக்காத சரவணன் என்ற இனிப்பு கடை நடத்துபவரை திருமணம் செய்து கொள்கிறார் . மேலும் தன் ஆசையை சரவணனிடம் கூற முயற்சித்தும் வீட்டில் உள்ளவர்களை சமாளிக்க நினைத்து வருகிறார்.

தற்போது இவர் போலீஸ் கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவரின் ஆசையை குடும்பம் புரிந்து கொண்டு அவருக்கு உதவி உள்ளதோ என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here