இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.. அவர்களின் அகதிகள் முகாம் இப்படி தான் அழைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!!

0

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதரத்தை  மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வரின் இந்த அறிவிப்புகள் பலரின் பாராட்டுகளை பெற்றது.

இன்றும் முதல்வர் பேசியபோது, நேற்றைய தினம் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்றே தான் குறிப்பிட்டு பேசியதாகவும், ஆனால் இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் எனவும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் ஒன்றும் அனாதைகள் அல்ல என்றும் அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் இலங்கைத் தமிழர்கள் நலனில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here