ஐஸ்வர்யாவை பார்த்தால் என்னால பீலிங்க்ஸை கண்ட்ரோல் பண்ண முடியல – காவ்யாவிடம் புலம்பும் கண்ணன்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவை காதலிக்கும் விஷயத்தை காவியாவிடம் போட்டு உடைத்துள்ளார். அந்த பிராங்க் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடந்துள்ள நிலையில் இருவருக்கும் அதிக வரவேற்பு.

அதுவும் கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு நாளுக்கு நாள் ரொமான்ஸ் சீன் அதிகரித்தும் வருகிறது. கதிர் முல்லை ஜோடியையே ஓவர் டேக் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா, கண்ணன் மற்றும் பிரஷாந்த் இணைந்து பிரபல சேனல் ஒன்றிற்கு இன்டெர்வியூ அளித்துள்ளனர்.

இன்டெர்வியூ இடையே காவியாவிற்கு கால் செய்து பிராங்க் செய்துள்ளனர். அதாவது கண்ணன் தனக்கு தீபிகா மீது காதல் இருப்பதாகவும், அதிலிருந்து தன்னால் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் நடிக்கிறார்.

ஐஸ்வர்யாவை பார்த்தால் தன்னால் பீலிங்க்ஸை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று சொல்ல அதையும் நம்பி காவியா கண்ணனுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார். இது வயசு கோளாறு., அப்படி தான் இருக்கும் என்று சொல்ல அரங்கமே சிரித்து விட்டது. மேலும் அனைவரும் நம்பும்படியாகவே கண்ணனின் நடிப்பும் இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here