ராஜா ராணி 2 – இடி சத்தம் கேட்டு சரவணனை கட்டிப்பிடிக்கும் சந்தியா! தன் வாழ்க்கையை விட்டு விலகும்படி கூறும் சரவணன்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியாவை தன் வாழ்க்கையில் இருந்து விலகி விடும் படி சொல்லி விட்டு செல்கிறார் சரவணன். இதனால் சந்தியா நொறுங்கி போகிறார்.

ராஜா ராணி 2

ராஜா ராணி சீரியலில் சந்தியாவும் சரவணனும் ஒன்றாக கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்கின்றனர். பஸ்ஸில் சந்தியாவுடன் ஒருவர் தவறாக நடந்ததற்காக அவரை அடித்து நொருக்கிறார் சரவணன். மேலும் தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற சந்தியா இன்னும் வராததால் மிகவும் பதட்டமாகிறார்.

சந்தியா வந்தவுடன் நிம்மதியடையும் சரவணனை பற்றி அருகில் இருந்தவர் எடுத்து சொல்ல தன் மேல் இவ்வளவு பாசத்தை வைத்து கொண்டு தான் இப்படி கோவமாக இருக்கிறாரா?? என்று சந்தோசமப்படுகிறார். இந்த சந்தோசத்துடனேயே சந்தியா கோவிலுக்கு வந்து சரவணனுடன் சந்தோசமாக பொங்கல் வைக்கிறார்.

மேலும் பார்வதிக்கு அர்ச்சனாவின் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை கால் செய்து கொண்டே உள்ளார். ஒரு நல்ல முடிவை செல்லும்படியும் சொல்கிறார். அதோடு இல்லாமல் அர்ச்சனா பார்வதியிடம் வந்து உனக்கும் சந்தியாவுக்கும் எதோ பெரிய நெருக்கம் வந்துடுச்சு என்று கேட்க பார்வதி உங்க வேலைய மட்டும் பாருங்க என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்கிறார்.

சந்தியாவும் சரவணனும் வந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வந்ததால் ஒரு இடத்தில் ஒதுங்குகின்றனர். அப்பொழுது சந்தியா சரவணனிடம் நெருக்கம் காட்ட அவரை கட்டி பிடிக்கிறார். சரி ரொமான்ஸ் சீன் ஆரம்பிச்சிடுச்சுனு அனைவரும் ஆர்வமாக இருக்க சரவணன் சந்தியாவை தள்ளி விடுகிறார்.

சந்தியா எதுவும் புரியாமல் நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் நம்ம புருஷன் பொண்டாட்டியா வாழவே இல்லை. ஏன் இப்படி இருக்கீங்கன்னு என்று கேட்க அதற்கு சரவணன் உங்களுக்கு இந்த வாழ்க்கை செட் ஆகாது. தப்பான பஸ்ல ஏறிட்டா அதுல இருந்து இறங்கி திரும்பி வந்துடனும் என்று சொல்கிறார்.

சந்தியா உங்க குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி நான் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிறேன் என்றும் சொல்கிறார். உங்க மனசுல என்ன இருக்குனு கூட எனக்கு தெரியல என்று சொல்கிறார். சரவணன் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து அப்படியே சென்று விடுகிறார். இதோடு எபிசோடும் முடிடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here