விராட் கோலி & ரோஹித் டி20 பயணம் குறித்து ராகுல் டிராவிட்…, ஐபிஎல்-லில் இவங்க இருக்க மாட்டாங்களா??

0
விராட் கோலி & ரோஹித் டி20 பயணம் குறித்து ராகுல் டிராவிட்..., ஐபிஎல்-லில் இவங்க இருக்க மாட்டாங்களா??
விராட் கோலி & ரோஹித் டி20 பயணம் குறித்து ராகுல் டிராவிட்..., ஐபிஎல்-லில் இவங்க இருக்க மாட்டாங்களா??

இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்திய டி20 தொடர்களில் இடம் பெறாதது குறித்து ராகுல் டிராவிட் வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரை விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், ஒருநாள் தொடரை 2-0 இந்திய அணி வென்ற நிலையில், 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணி 27ம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதற்கான இந்திய அணியில், விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனியர் வீரர்கள் இனி, டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என பரவலான தகவல் வெளிவரத் தொடங்கின. இது குறித்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ரிஷப் பண்ட்…, ஒரே ஓர் இந்தியர் இவர் தானா??

அவர் கூறியதாவது, இந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட இரு பெரிய தொடர்கள் வர இருப்பதால், முன்னணி வீரர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்பட்டு வருகிறது. மேலும், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தலா 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதால், டி20 தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், வீரர்களுக்கான பணிச்சுமை கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here