BWF பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இருந்து விலகிய பி வி சிந்து…, பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு!!

0
BWF பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இருந்து விலகிய பி வி சிந்து..., பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு!!
BWF பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இருந்து விலகிய பி வி சிந்து..., பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு!!

BWF பேட்மிண்டன் வேர்ல்ட் டூர் இறுதிப் போட்டியில் இருந்து, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி வி சிந்து காயம் காரணமாக விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பி வி சிந்து:

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கத்தை வென்று பி வி சிந்து அசத்தி இருந்தார். இதன் மூலம், இந்தியாவில் மிகவும் பிரபலமானார். மேலும், டோக்கியா ஒலிம்பிக், காமன் வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல தொடர்களிலும் பதக்கங்ககளை வென்று நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர், நடப்பு ஆண்டில் பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஒற்றையர் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார். இதனை தொடர்ந்து, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கமும் வென்றிருந்தார். இதன் மூலம், ஸ்பெயினின் கரோலினா மரினை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை பி.வி சிந்து தட்டி சென்றிருந்தார். இதனால் இவர், அடுத்த மாதம் BWF வேர்ல்ட் டூர் இறுதிப் போட்டியில் பதக்கம் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், காமன்வெல்த் போட்டியின் போது, இவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாத காரணத்தால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் BWF வேர்ல்ட் டூர் இறுதிப் போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முழு உடற்தகுதி தேவை என்பதால், அதற்கு தயாராகும் வகையில், சில போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here