“வாரணம் ஆயிரம்” படத்தோட ஜெராக்ஸ் தான் நானும் என் அப்பாவும்.., புகழாரம் பாடிய கெளதம் மேனன்!!

0
"வாரணம் ஆயிரம்" படத்தோட ஜெராக்ஸ் தான் நானும் என் அப்பாவும்.., புகழாரம் பாடிய கெளதம் மேனன்!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கெளதம் மேனன் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இயக்குனர் கெளதம் மேனன்:

தமிழ் சினிமாவில் காதல் காட்சிகளை சித்திரமாக வடிவமைப்பவர் தான் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் கடைசியாக இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. ஆனால் இந்த படம் கெளதம் பட பாணியில் இல்லை என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை கூறி வந்தனர். இருப்பினும் இப்படம் 75 கோடி வசூல் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் கெளதம் தனது குடும்பத்தை குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது அவர் பேசியதாவது, என்னுடைய மகன் மிகவும் பொறுப்பான பையன், அவர் செய்யும் அதிக பயிற்சிகளும், பணிகளும் அவருக்கு மூலதனமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் என் அப்பா என்னை எப்படி வளர்த்தாரோ, அதே போல தான் எனது மகனையும் வளர்க்கிறேன் என்று தெரிவித்தார்.

கதிகலங்கி கிடக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.., தனம் செஞ்ச அந்த ஒரு காரியம்.., பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்!!

என் மகனிடம் நான் ஒரு பிரண்ட் போல் பழகி வருகிறேன். சமீபத்தில் எனது மகன் ஆர்யா யோஹன் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் ஆடியிருந்தார் என்று புகழாரம் பாடினார். சொல்ல போனால் வாரணம் ஆயிரம் படம் போன்று தான் என் அப்பா என்னிடம் இருந்தாரோ அதே போன்று தான் நான் என் மகனிடம் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here