அடுத்த 25 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் பாலைவனம் – மாநில சட்டமன்ற குழு எச்சரிக்கை!!

0

வருகின்ற 25 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப்  மாநிலம் பாலைவனமாக மாறி விடும் என அந்த மாநிலத்தின் சட்டமன்ற ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் பாலைவனம்:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதல்வர் அம்ரிந்தர் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்த மாநிலத்தின் முக்கிய விளைச்சலாக கருதப்படும் கோதுமை உலகின் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கோதுமை விளையும் இடங்களில் இந்த பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனால், இந்த மாநிலத்திற்கு என்று சிறப்பான அங்கீகாரம் பொது மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மாநிலத்தின் சட்டமன்ற ஆய்வு குழு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.  இந்த பரபரப்பான எச்சரிக்கை பஞ்சாப் வாசிகளிடம் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, பஞ்சாப் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுக்கு ஆண்டு 70 செ.மீ என்ற அளவுக்கு குறைந்து வருவதாக சட்டமன்ற ஆய்வு குழு அறிவித்துள்ளது.

இந்த நிலை, இப்படியே தொடர்ந்தால் வருகிற 25 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலமே பாலைவனமாகிவிடும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மக்கள் அனைவரும் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் எனவும் இந்த குழு அறிவுறுத்தியுள்ளது.  உலகின் பல நாடுகளுக்கு உணவு வழங்கும் இந்த மாநிலத்தில், விரைவில் நிலத்தடி வளம் காலியாகி விடும் என்ற அறிவிப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here