லட்சுமி இறந்ததற்கு கண்ணன் தான் காரணம் என்று பழி போடும் அக்கம்பக்கத்தினர் – உடைந்து போன ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது லட்சுமி இறந்த விஷயம் தெரிந்து தற்போது குடும்பமே கதறி அழுகிறது.  லட்சுமி இறந்ததற்கு கண்ணன் மீது பழி போடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில நாட்களாகவே குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இப்பொழுது தான் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்திருந்தது. அடுத்து கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள இதனால் குடும்பத்தில் பெரிய இடியே விழுந்தது.

pandian stores

இதனால் உடல் நலம் சரியில்லாமல் இருந்த லட்சுமி நேற்றைய எபிசோடில் உயிரிழந்தார். குடும்பமே கதறிக்கொண்டுள்ளது. விஷயம் தெரிந்த அனைவரும் வீட்டிற்கு வர ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தனத்தின் அண்ணன் ஜெகா, விசயம் தெரிந்து ஓடி வருகிறார்.

pandian stores

அக்கபக்கத்தினரும் வீட்டிற்கு வர கண்ணன் செய்த காரியத்தால் தான் இப்படி இறந்து விட்டார் என்று சொல்ல ஆரம்பிக்கின்றனர். ஜீவா இனி அம்மா இல்லாமல் என்ன செய்ய போகிறோம் என்று கதறி அழுகிறார். ஜீவாவின் நிலையை பார்த்து மீனா கதற ஆரம்பிக்கிறார். ஜீவாவிற்கு ஆறுதலாகவும் இருக்கிறார்.

மீனாவாலும் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. மூர்த்தியே இதனை தாங்க முடியாமல் அழுதே விட்டார். கதிர் அம்மா இருக்கும் தைரியத்தில் தான் வாழ்ந்தோம். எல்லா விஷயத்திலும் பக்கபலமாக இருந்த அம்மாவே இப்படி போயிட்டாங்களே என்று அழுக ஆரம்பிக்கிறார்.

முல்லையின் அம்மா அப்பாவிற்கும் தகவல் சொல்ல அவர்களும் உடைந்து போகின்றனர். தன் அக்கா இறந்து போன விரக்தியில் ரோட்டிலேயே விழுந்து அழுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here