
இனி வரும் நாட்களில் அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டத்தை கடைபிடிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு போதிய கல்வி அறிவு வழங்குவதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது இப்போது வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக பாடத்திட்டம் தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வரவிருக்கும் கல்வியாண்டில் இருந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு புதுச்சேரி அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள 128 அரசு பள்ளிகளில் தமிழக பாடத்திட்டத்தை CBSE க்கு மாற்ற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் மட்டும் ஒப்புதல் வழங்கி விட்டால் தமிழக பாடத்திட்டத்துக்கு பதில் CBSE பாடத்திட்டம் மாற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.