தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் தான் நடிகை அமலா பால். இதை தொடர்ந்து பல ஹிட் படங்களை அடுத்தடுத்து தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார். இது போக சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிய குறுகிய நாட்களிலேயே ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஒரு கட்டத்திற்கு மேல் இவரது சினிமா மார்க்கெட் குறைய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தான் இவர் கவர்ச்சி நாயகியாக களமிறங்கி ஏகப்பட்ட கிளாமர் போட்டோஸ்களை எடுத்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தார். தற்போது இவர் போலோ, ஆடு ஜீவிதம் ஆகிய இரண்டு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமாவில் ஓரளவு பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளாமர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 1 மணி நேரத்துக்குள் 35.8k லைக்குகளை குவித்துள்ளனர்.
View this post on Instagram