
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தோட்டக்கலை, ரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்களுக்கும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை அரசாங்கம் உயர்த்தியது.

இந்த வகையில் புதுச்சேரி மாநில முதல்வர், அம்மாநில எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 33 எம்.எல்.ஏக்களுக்கு தலா 500 பட்டாசுகள் மற்றும் 500 கிலோ இனிப்பு வகைகளையும் வழங்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.