ஊழியர்களின் பிற்கால தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசானது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை PF கணக்காக வரவு வைக்கப்படுவது வழக்கமான ஒன்று. இதற்கிடையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது, கடந்த ஜூலை மாதத்தில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்திற்க்கான வட்டி விகிதத்தை 8.10 % – லிருந்து 8.15 % – ஆக உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

இதற்கான செயல்முறைகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், நேற்று (நவம்பர் 10) இந்த வட்டி விகித உயர்வு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளதாக EPFO தெரிவித்துள்ளது. அதாவது மத்திய அரசு, EPF திட்டத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 8.15 சதவீத வட்டிக்கு கடன் வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.