சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
கோலிவுட் திரையில் எக்கச்சக்க வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபலமானவர் தான் செல்வராகவன். தமிழில் ஆயிரத்தில் ஒருவன், 7G ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுப்பேட்டை. இத்திரைப்படம் கதை ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து அசத்தியது.
இதில் நடிகர் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இந்த நிலையில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓர் முக்கிய தகவல் கஇணையத்தில் சிந்துள்ளது . அதாவது புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும், அடுத்த சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here