தேவதை அவள் ஒரு தேவதை… அழகிய பூ முகம் காண ஆயுள் தான் போதுமோ… பிரியா பவானி சங்கரின் கலக்கல் புகைப்படம்!!!

0

பல படங்களை தன்  கைவசம் வைத்துக் கொண்டு வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் டாப் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு படு கலக்கலான லுக்கில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கையில் பல படங்களுடன் வலம் வரும் இளம் நடிகை பிரியா பவானி சங்கர். சின்னத்திரையை தன்னுடைய தொடக்க புள்ளியாக கொண்டு பயணத்தை ஆரம்பித்தார். அப்பொழுது இருந்தே அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. மேலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவரை போல் வளர்ந்து வரும் இளம் நடிகைகளுக்கு அவரின் அதீத வளர்ச்சி அவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைத்து உள்ளது. மிகவும் குறைந்த காலத்தில் அவரின் இந்த அதிவேக வளர்ச்சி முன்னணி நடிகைகளுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை எதையும் கண்டுகொள்ளாமல் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து பல வெற்றி படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஒரு சில படங்களில்  நடித்து முடித்து உள்ளார்.

இவ்வாறு படு பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்களை ஷேர் செய்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் உடன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு சிரித்தபடி படு மாடர்னாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here