இனியாவின் ஸ்கூல் அன்னையர் தின விழாவுக்கு சந்தோஷமாக செல்லும் பாக்கியா…!இன்றைய பாக்கியலட்சுமி கதைக்களம்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை பெற்று ஒரு வெற்றி சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இன்று, இனியாவின் ஸ்கூலில் நடைபெறும் அன்னையர் தின விழாவிற்கு மிகவும் சந்தோசமாக கிளம்புகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில்,கோபியின் முன்னிலையில் நடனமாடுகிறார் பாக்கியா. அவரை பாராட்டுகிறார் கோபி. பாக்கியாவின் நடனத்தை வீடியோ எடுத்த படி இருக்கிறார் எழில். இந்நிலையில் இன்று, உள்ளே வரும் எழில் பாக்கியாவின் நடனத்தை பாராட்டுகிறார். மேலும் எவ்வளவு திறமையை வச்சுக்கிட்டு ஏன் ஸ்கூலுக்கு போய் ஆட மாட்டேன் எதுக்கு சொன்ன என கேட்கிறார் எழில்.

மேலும் தன்னுடைய போனில் இருக்கும் அவரின் வீடியோவையும் காண்பிக்கிறார். இதையடுத்து பொழுது விடிகிறது. இனியா பாக்கியாவை அழைத்த படி இருக்க, அப்பொழுது எழில் பாக்கியாவின் நடன திறமை பற்றியும், அவர் நடனமாடுவதை பற்றியும், பாட்டி மற்றும் தாத்தா விடம் கூறுகிறார். அதற்கு பாட்டி ஒத்துக்கொள்ளாமல் வழக்கம் போல் பாக்கியாவை மட்டம் தடுக்கிறார்.

அதன் பின்னர் பாக்கியாவிடம் கோபியின் முன்னிலையில் நடனமாடுவது பற்றி பாட்டி கேட்கிறார். அதன் பிறகு எழில் காலை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார். இதையடுத்து பாக்கியா மற்றும் இனியா ஸ்கூல்  கிளம்புகின்றனர். இந்நிலையில் ஸ்கூல் உள்ளே வரும் இனியா, பாக்கியாவை பார்த்து, சந்தேகத்துடன் கேட்கிறார்.

அதற்கு கோவப்படும் பாக்கியா, தான் செய்த அனைத்தையும் கூறுகிறார். அப்பொழுது, ராதிகா மற்றும் மையூ அங்கு  வருகின்றனர். அவர்களை பார்க்கும் இனியா மற்றும் பாக்கியா அவர்களிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறனர்.

அதன் பின்னர், ராதிகாவிடம் என்ன பண்ண போறீங்க என இனியா கேட்க அதற்கு ராதிகா, தலைமை பண்பு பற்றி ஒரு சொற்பொழிவு கொடுக்க உள்ளதாக கூறுகிறார். அப்பொழுது ராதிகா நீங்க என பண்ண போறீங்க என கேட்கிறார்.

அதன் பின்னர் ராதிகாவே நீங்க சமைக்க போறீங்களா? என கேட்கிறார். அதன் பின்னர் மையு மற்றும் ராதிகாவும் கிளம்புகின்றனர். அதன் பின்னர் அங்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வந்து ஒவ்வொரு இடத்திற்கு சென்று மதிப்பிடுகின்றனர். அதை பார்த்து பயப்படும் இனியா, நாம இப்படியே போக விடலாமா? என கேட்கிறார்.  இவ்வாறு பாக்கியாவின் மீது நம்பிக்கை இல்லாமல் பயத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறார் இனியா. இத்துடன் இன்றைய கதை நிறைவு பெறுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here