கடை கடையாக ஏறி வேலை தேடும் கண்ணன்…!தம்பிக்காக ஜனார்த்தனிடம் சிபாரிசு செய்யும் கதிர்!!!

0

விஜய் டிவியில் இரவு 8 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இன்று, கண்ணன் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை கேட்கிறார். அதை பார்க்கும் கதிர் வருத்தப்பட்டு ஜீவாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த வேளையில் அங்கு வரும்  ஜனார்த்தனிடம் கண்ணனுக்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலை கொடுக்க முடியுமா? என கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு அடகு கடை முதலாளி மூலம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவி செய்கிறார். அதை கண்டு நிகழ்ச்சியில் இருக்கிறார் கண்ணன். அதன் பின்னர் ஹாஸ்பிடலில் இருந்து லட்சுமி வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் இன்றைய கதையில், லட்சுமி, முல்லை மற்றும் கதிரிடம் தன்னுடைய மகன்கள் மற்றும் மருமகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் அப்பொழுது கண்ணனைப் பற்றியும் அவன் வீட்டில் இல்லாததை பற்றியும் பேசி கொண்டிருக்கின்றனர். மேலும் கதிர் மற்றும் முல்லையிடம் குழந்தை பெற்றுக்கொள்ள சொல்கிறார் லட்சுமி. மேலும் நான் உயிரோடு இருக்கும் போதே குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு சொல்ல, அதற்கு இருவரும் சிரித்தபடியே சம்மதிக்கின்றனர்.

இந்நிலையில்  பேசிக்கொண்டு இருக்கும்போதே லட்சுமி தூங்கிவிட, லட்சுமியை படுக்க வைத்துவிட்டு இருவரும் ரூமுக்கு செல்கின்றனர். பொழுது விடிகிறது. அப்பொழுது ஆழ்ந்த யோசனையில் இருக்கும் கண்ணனிடம், டீ போட்டு கொண்டு வந்து தருகிறார் ஐஸ்வர்யா. அப்பொழுது கண்ணனிடம் வீட்டு நியாபகம் வந்துவிட்டதா? என கேட்கிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் கண்ணன், தன் வீட்டை பற்றியும் தன்னுடைய அண்ணிகள் பற்றியும் கவலைப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது, கண்ணன் ஐஸ்வர்யாவிடம் காலேஜ்க்கு போகுமாறு கூறுகிறார். மேலும் கண்ணன் தான் வேலைக்கு போக உள்ளதாகவும் கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதன் பின்னர் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை கேட்கிறார்.

அனைவரும் கண்ணனை நிராகரிக்கின்றனர். அப்பொழுது ஒரு ஹோட்டலுக்குள் நுழையும் கண்ணன் அங்கு ஏதாவது வேலை இருக்குமா? என கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே அந்த ஹோட்டலுக்குள் இருக்கும் கதிர், கண்ணை பார்த்து வருத்தப்படுகிறார். அந்த நேரத்தில் கதிரை அழைக்கும் கடை முதலாளி கண்ணன் பார்த்து ஏளனமாக கூறுகிறார்.

அந்த சமயத்தில்  கதிரை பார்க்கும் கண்ணன், அழுதுகொண்டே கடையை விட்டு வெளியே செல்கிறார். இதையடுத்து கண்ணன் வேலைக்காக கெஞ்சியதை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார் கதிர். அப்பொழுது அங்கு வரும் ஜீவா, கதிரின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகித்து, என்னாச்சு என கேட்க, அதற்கு கதிர் கண்ணனைப் பார்த்ததையும், அவன் வேலை கேட்டதையும் பற்றி கூற அதை கேட்கும் ஜீவா வருத்தப்படுகிறார்.

அப்பொழுது அங்கு வரும் ஜனார்த்தனன், சூப்பர் மார்க்கெட் வேலைக்கு ஆள் வேண்டும் என்று சொன்னேனே என்னாச்சு என ஜீவாவிடம் கேட்க, அந்த நேரத்தில்  குறுக்கிடும் கதிர், கண்ணனை அந்த வேலைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா? என கேட்கிறார். அதற்கு யோசிப்படி இருக்கிறார். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here