நிபா வைரஸிடம் மீண்டும் சிக்கிய கேரளா – மத்திய அரசின் சிறப்பு குழு ஆய்வு!!

0

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதித்து உயிர் இழந்த 12 வயது சிறுவனின் வீட்டில் மத்திய அரசின் சிறப்பு குழு ஆய்வு மேற்கொள்கிறது.

அம்மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு நிபா வைரசால் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். ஏற்கனவே கொரோனாவில் சிக்கி தவித்து வரும் கேரளாவுக்கு இது பெரிய இடியாக விழுந்துள்ளது. அடுத்து அவனுடன் தொடர்பிலிருந்த 11 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாகக் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரானாவிற்கு அடுத்தபடியாக நிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வருவதால் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் சிறப்பு குழு அந்த வைரஸால் இறந்த சிறுவனின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. சிறுவன் உண்டதாக சொல்லப்படும் ரம்புட்டான் பழத்தின் மாதிரிகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here