ஆர்சனல் Vs டோட்டன்ஹாம்.., விறுவிறுப்பாக அரங்கேறிய திரில் போட்டி.., இறுதியில் வெற்றி யாருக்கு தெரியுமா??

0
ஆர்சனல் Vs டோட்டன்ஹாம்.., விறுவிறுப்பாக அரங்கேறிய திரில் போட்டி.., இறுதியில் வெற்றி யாருக்கு தெரியுமா??
ஆர்சனல் Vs டோட்டன்ஹாம்.., விறுவிறுப்பாக அரங்கேறிய திரில் போட்டி.., இறுதியில் வெற்றி யாருக்கு தெரியுமா??

லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் அனைத்து அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஆர்சனல் மற்றும் டோட்டன்ஹாம் அணிகள் மோதியது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக அரங்கேறி வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் 1 கோல் அடித்து சமனில் இருந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆர்சனல் அணி, எதிரணியை கோல் அடிக்க விடாமல் மிகவும் திணறடித்தனர்.

மேலும் ஆர்சனல் அணி தங்களுக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் வெற்றி கோல்களாக மாற்றினர். இதனால் ஆட்டத்தின் முடிவில் ஆர்சனல் அணி, டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி 3 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த லிவர்பூல் அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் ஆர்சனல் அணி, லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here