கர்ப்ப காலத்துல ஆல்யா மானசா செஞ்ச வேலைய பாருங்க..! சஞ்சீவை திட்டும் ரசிகர்கள்..!

0

விஜய் டிவியின் சீரியலான ராஜா ராணியில் நடித்து பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் காதல் திருமணமும் செய்து கொண்டனர். மேலும் தற்போது ஆல்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது அவர் செய்த காரியத்தை பார்த்து ரசிகர்கள் அவரது கணவரை சஞ்சீவை திட்டிக் கொண்டிருகின்றனர்.

விளம்பரப்படத்தில் ஆல்யா..!

ஆல்யா மானசா பிரபல நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அப்பொழுது தனது கணவர் எடுத்த வீடியோவை ஆல்யா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் அவரை பாராட்டினாலும் சிலர் அவரை திட்டியுள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான அவர் வீட்டில் ஓய்வு எடுக்காமல் இப்படியா செய்வது என்று பலரும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் கொரோனவினால் அனைவரும் வெளியே வராமல் இருக்கின்றனர். நிறைமாத கர்ப்பிணியை இப்படி வெளியே விடலாமா என்று சஞ்சீவையும் திட்டியுள்ளனர்.

உங்க வேலையை பாருங்க..!

ஆல்யா மானசா கர்ப்ப காலத்தில் ஓய்வு எடுப்பதை விட்டு விட்டு இப்படி விளம்பரங்களில் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள் சொந்த கணவருக்கே கவலை இல்லை உங்களுக்கு என்ன?? ஏம்பா ஓவரா இருக்கு. ஆல்யாவை பற்றி அவர் கணவருக்கு இல்லாத அக்கறையா உங்களுக்கு.

ஆல்யாவுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று நினைத்திருந்தால் சஞ்சீவ் முதலில் அவரை விளம்பரப்படத்தில் நடிக்க விட்டிருப்பாரா? எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here