அடேங்கப்பா..ஒட்டு மொத்த உலகத்தையே வியக்க வைத்த இந்திய சிறுவன் – நிலவின் மிகத்துல்லியமான படம்!!!

0

புனேவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ப்ரத்மேஷ் ஜாஜூ. இவர் நிலவின் 50,000 புகைப்படங்களை படம் பிடித்து பின்னர் அந்தப்படங்களை வைத்து மிகத்துல்லியமான நிலவின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை இவ்வளவு துல்லியமாக யாரும் நிலவை  புகைப்படம் எடுத்ததில்லை என அறிவியலாளர்களே வியந்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் டெலஸ்கோப் வழியாக இந்த 50,000 புகைப்படங்களை எடுத்துள்ளார்.  மேலும் அந்த புகைப்படங்களை ஒன்றிணைத்து கீழே உள்ள புகைப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த புகைப்படத்தின் தனி சிறப்பம்சம் என்னவென்றால் பிற படங்களை போன்று இதை ஜூம் செய்தல் மங்கலாகவோ அல்லது குவாலிட்டி உடையவோ செய்யாது.

இதுகுறித்து ப்ரத்மேஷ் ஜாஜூ கூறும்போது மே 3ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு வீட்டின் மொட்டை மாடியிலிருந்து, டெலஸ்கோப் மூலமாக நிலவை படம் எடுக்க ஆரம்பித்தேன். அதிகாலை 5 மணிக்குத்தான் படங்களை எடுத்து முடிக்க முடிந்தது.இந்த படம் இரண்டு வெவ்வேறு படங்களின் எச்டிஆர் கலவை. மேலும் இது 3டி எபெக்டை கொடுக்கும் என கூறியுள்ளார்.

இவர் எடுத்த ஆயிரக்கணக்கான புகைப்படங்களை ஒரே படமாக மாற்ற இமேஜ் கம்போசிட்டிங் (image compositing) என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளார். தற்போது இவர் எடுத்த இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here