ஜூனியர் என்.டி.ஆர். காக மாஸான போஸ்டர் ஐ வெளியிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழு !!!

0

ஜூனியர் என்டிஆர் லேட்டஸ்ட் ஆக நடித்துவரும் திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஜூனியர் என்டிஆர் இன் பிறந்தநாளுக்காக மாஸான அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர்.ம் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவும் :

நந்தமூரி தாரக ராமாராவ் என்னும் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் ஆவர். இவரது படங்களுக்கு என தனி எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். தற்போது வெற்றி இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் இல் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்களின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here