ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள்…, உலக கோப்பைக்கு தகுதி!!

0
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள்..., உலக கோப்பைக்கு தகுதி!!

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் நந்திதா தங்கம் வென்று அசத்தியதன் மூலம், உலக கோப்பை செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்:

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டிகளில், ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து வீரர்கள் பங்கு பெற்று விளையாடின. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் ஓபன் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதே போல, தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா இந்த சாம்பியன்ஷிப்பில் 9 சுற்றுகள் முடிவில் 7 புள்ளிகளை பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், நந்திதா மற்றும் பிரக்ஞானந்தா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றனர்.

இந்தியாவை வீழ்த்தினால் கல்யாணம் பண்ணிக்குவேன்.., ஜிம்பாப்வே வீரருக்கு ரூட்டு விடும் பாகிஸ்தான் நடிகை!! 

இவர்கள் உலக கோப்பை செஸ் தொடருக்கு தகுதி பெற்றதன் மூலம், வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மேலும், உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை வெல்லவார்கள் என பெரிதும் எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here