இந்தியாவை வீழ்த்தினால் கல்யாணம் பண்ணிக்குவேன்.., ஜிம்பாப்வே வீரருக்கு ரூட்டு விடும் பாகிஸ்தான் நடிகை!!

0
இந்தியாவை வீழ்த்தினால் கல்யாணம் பண்ணிக்குவேன்.., ஜிம்பாப்வே வீரருக்கு ரூட்டு விடும் பாகிஸ்தான் நடிகை!!
இந்தியாவை வீழ்த்தினால் கல்யாணம் பண்ணிக்குவேன்.., ஜிம்பாப்வே வீரருக்கு ரூட்டு விடும் பாகிஸ்தான் நடிகை!!

வரும் ஞாயிற்றுக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி டி20 உலக கோப்பை போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டியை குறிப்பிட்டு பாகிஸ்தான் நடிகை வெளியிட்ட ட்வீட் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நடிகை:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. இந்த சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியானது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல நடிகையான ஷேகர் ஷின்வாரி ஒரு ட்வீட் ஒன்றை போட்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளார். அதாவது, டி20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணியை ஜிம்பாப்வே வீழ்த்தினால், ஜிம்பாப்வே வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருது…, இந்த மூவரில் யாருக்கு??

இந்த பதிவை பார்த்த, இந்திய ரசிகர்கள், “பாவம் மாப்பிள கிடைக்கல போல, அப்போ உனக்கு கல்யாணமே ஆகாது”, “வாய்ப்பில்லை மேடம்” என கமெண்ட் செய்து கிண்டல் அடித்து வருகிறார்கள். இதே போல, ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவுக்கு சொந்த ஊர் பாகிஸ்தான் ஆகும். இவர் ஒருவர் தான் ஜிம்பாப்வே அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால், இந்த பாகிஸ்தான் நடிகை இவருக்கு ரூட் விடுவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here