கருகருன்னு அடர்த்தியாக முடி வளரணுமா., அப்போ இந்த விஷயத்தை பாலோவ் பண்ணுங்க!!

0
கருகருன்னு அடர்த்தியாக முடி வளரணுமா., அப்போ இந்த விஷயத்தை பாலோவ் பண்ணுங்க!!

முடி அதிகமா உதிருது, வளர்ச்சி சுத்தமா இல்ல, சீக்கிரம் எனக்கு வழுக்கை வந்துரும் இப்படி நம்மில் பலர் நாள்தோறும் புலம்பி கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால் முடி உதிர்தல் இப்போது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது. இதிலிருந்து மீள நாம் அதிக ரசாயனங்கள் கலந்த எண்ணெய், ஷாம்புவை தேடி செல்கிறோம். ஆனால் எதனால் அந்த பிரச்சனை நமக்கு வருது என்று யாரும் யோசிப்பது இல்லை. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், கூந்தலுக்கு சரியான புரதம் கிடைக்காதது தான். இதனால் தான் முடி உதிர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கிறோம். எனவே பதிவின் கீழ் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து 2 மாதத்திற்கு கடைபிடித்து பாருங்கள், உங்களுக்கு விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டிப்ஸ்:

  • வைட்டமின் A , C , E , புரதம், கொழுப்பு, இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • அதாவது சிக்கன், கீரைகள், முட்டைகள், பழங்கள் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • அடுத்து வீட்டில் தயாரித்த எண்ணெய்யை தினமும் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி இருக்கும். அதாவது இந்த HOME MADE HAIR OIL தயாரிக்க காய்ந்த செம்பருத்தி பூ (20), செம்பருத்தி இலை (13), தேங்காய் எண்ணெய் (1/4 லிட்டர்) தேவை.
  • செம்பருத்தி பூன், இலைகளை நல்ல நைசாக அரைத்து, சூடான தேங்காய் எண்ணெயில் சேர்த்து சிறிது நேரம் சூடு செய்ய வேண்டும். இதையடுத்து வடிகட்டி பாட்டிலில் வைத்து, நாள்தோறும் யூஸ் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
  • வாரத்திற்கு ஒரு முறை குளிக்கும் முன் சுத்தமான தேங்காய் எண்ணெய் வைத்து, தலையில் முடி வேர் வரை மசாஜ் செய்து கால் மணி நேரம் கழித்து ஹேர் வாஷ் செய்தால் நல்லது.
  • தலை குளிக்கும் போது ஷாம்பு, சீயக்காயை அப்படியே எடுத்து உச்சியில் வைக்க கூடாது, கையில் அல்லது ஒரு சின்ன பவுலில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸ் செய்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.
  • தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுங்கள், ஏனென்றால் வைட்டமின் சி அதில் அதிகமாக உள்ளது.
  • சாப்பாட்டில் உணவை தாளிக்க சேர்த்திருக்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள். இவையும் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here