ஐ.டி ஊழியர்களுக்கு ஷாக்.,, Infosys நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

0
ஐ.டி ஊழியர்களுக்கு ஷாக்.,, Infosys நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் இன்போசிஸ், ஊழியர்களின் variable pay தொகையை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Infosys நிறுவனம்:

ஐடி ஊழியர்கள் கூடுதல் வருமானத்திற்காக “மூன் லைட்டிங்” முறையில் ஈடுபட்டு வருவதாக பல சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து ஒரு சில ஐ.டி. நிறுவனங்கள் மூன் லைட்டிங் முறையில் ஈடுபட்ட தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மேலும் பல நிறுவனங்கள் மூன் லைட்டிங்கில் ஈடுபட கூடாது என்று ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கிடையில் யாருமே எதிர்பார்க்காத விதமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் ஃப்ரீலான்சிங் பணிகளைச் செய்ய அனுமதி அளித்தது. இதனால் ஊழியர்கள், மூன் லைட்டிங் முறையில் ஈடுபடுவது குறைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெரும் ஷாக் கொடுக்கும் விதமாக இன்போசிஸ் நிறுவனம், ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க முடிவு? 3 தவணையாக வரப்போகும் பணம்!!

அதாவது தனது ஊழியர்களுக்கு செப்டம்பர் காலாண்டு வேரியபிள் பேயில் 60% குறைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வேரியபிள் பே குறைப்பு அனைத்து இன்போசிஸ் ஊழியர்களுக்கும் இல்லை என்றும், உலக அளவில் BPM பிரிவில் உள்ள 50000 ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் J4, J5, J6 பிரிவில் இருக்கும் IT ஊழியர்களுக்கு இந்த 60% வேரியபிள் பே குறைப்பு இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here