உஷார் மக்களே.., தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளுக்கு மின்தடை அறிவுப்பு!!

0

தமிழகத்தில் திருநெல்வேலி நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதாவது மின்கம்பங்களில் ஏற்படும் மின் கசிவு காரணமாக அதிக மின் விநியோகித்தால் பல விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மாதிரியான விபத்துகளை தடுப்பதற்கு தமிழக மின் வாரியம், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில் மின் பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையத்தில் நடைபெறும் போது, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் நலன் அடிப்படையில் மின்விநியோகம் சில மணி நேரம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை குறித்த அறிவிப்பு அந்தந்த மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளருக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும். அந்த வகையில் மானூர் பகுதியில் (14-ந் தேதி) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது திருநெல்வேலி நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சி குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here